Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காஷ்மீரில் தேசத்துரோகத்தில் ஈடுபட்டனர் என்று 12 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் 8ம் திகதி தீவிரவாத ஆதரவாளர்களின் தலைவர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் காஷ்மீரில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது.சில இடங்களில் இன்னமும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களுக்கு விவரங்கள் அளித்தனர் என்று 12 அரசு அதிகாரிகளை மாநில அரசு பணி நீக்கம் செய்துள்ளது. 

கடந்த 1990ம் ஆண்டு இதே போன்று செயல்பட்ட 5 அதிகாரிகளை அப்போதைய காஷ்மீர் அரசு பணி நீக்கம் செய்தது எண்பது குறிப்பிடத்  தக்கது.

0 Responses to காஷ்மீரில் 12 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com