ரூபாய் 1,500 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் வருகை சிவகாசி தயாரிப்பாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி பட்டாசுகள் இருக்க, சீன பட்டாசுகள் எதற்காக என்று குமுறுகிறார்கள் சிவகாசி உற்பத்தியாளர்கள்.
சீனாவில் தயாராகும் பட்டாசுகள் கண்டெய்னர்களில் வேறு பெயர்களில் கடத்தி வரப்பட்டு வருகின்றன. சமீபத்தில் டெல்லியில் அப்படி கொண்டு வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்புள்ள பட்டாசுகளும் மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள பட்டாசுகளும் அழிக்கப்பட்டன. என்றாலும் சீனா தயாரிப்பு பட்டாசுகள் இந்தியா முழுவதும் பரவுவதை தடுக்க இயலவில்லை. தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் 2 ஆயிரம் கண்டெய்னர்களில் சீன தயாரிப்பு பட்டாசுகள் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை, கொல்கத்தா, கன்ட்லா, சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாகத்தான் சீன பட்டாசுகள் அதிக அளவில் கள்ளத்தனமாக கடத்தி வரப்பட்டுள்ளன. இந்த துறைமுகங்களில் அதிநவீன ஸ்கேனர்கள் இல்லாததும், ஊழியர்கள் பற்றாக்குறையால் முழுமையாக சோதனையிடாததும் சீன பட்டாசுகளை கடத்தி வருபவர்களுக்கு உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த தீபாவளி சீசனுக்கு மட்டும் சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் கள்ளத்தனமாக கடத்தி வரப்பட்டு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சீன பட்டாசுகள் வருகை அளவுக்கு அதிகமாக இருப்பதை அதிகாரிகளும் உறுதிபடுத்தி உள்ளனர்.
தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்தியாவில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் தயாரித்து விற்பனையாகும். இதில் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.தற்போது ரூ.1,500 கோடிக்கு சீன பட்டாசுகள் வந்திருப்பதால் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு சுமார் 50 சதவீதம் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 90 சதவீதத்தை பூர்த்தி செய்யும் சிவகாசியில் 600-க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளில் சுமார் 2 லட்சம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.சீன பட்டாசுகளின் வருகை அந்த 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே நோய்கள் பரப்பும் சீன பட்டாசுகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

0 Responses to சிவகாசி பட்டாசுகள் இருக்க சீன பட்டாசுகள் எதற்கு?; சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை