மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாலேயே சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த வடக்கு மாகாண முதலமைச்சர், அங்கு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “எம்மை நாமே ஆளும் நிலை ஏற்பட வேண்டும். தற்போது கிடைத்துள்ள அதிகாரங்கள் யாவும் பலவீனமானவை. அதிகாரங்கள் முடக்கப்பட்ட நிலையிலேயே வடக்கு மாகாண சபையின் பணிகளை கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.
குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் 1987ஆம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்தின் ஊடாக பறிக்கப்பட்டுள்ளது. இவற்றை மாற்றியமைக்கும் முகமாகவே சமஷ்டி முறையிலான அரசியலமைப்பினை கோரியுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாலேயே சமஷ்டிக் கோரிக்கை: சி.வி.விக்னேஸ்வரன்