பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 34 காசும், டீசல் விலையை 2 ரூபாய் 37 காசும் உயர்த்தி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ஏனெனில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 50 முதல் 51.95 அமெரிக்க டாலர் அளவுதான் நீடிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி அரசு பதவி ஏற்ற மே 2014, ல் கச்சா எண்ணெய் விற்பனை விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 2016 இல் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 விழுக்காடு அளவுக்கு குறைந்து இருக்கிறது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசு சாதாரண மக்கள் மீது சுமையை ஏற்றுவது கண்டனத்துக்கு உரியது ஆகும்.
மேலும் பெட்ரோல், டீசலுக்கான வரிகளை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதால், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும் அதன் பயன் மக்களுக்குக் கிடைக்கவில்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ஐந்து முறை அதிகரித்து இருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தாமலிருந்தால் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.10.02, டீசலின் விலை ரூ.9.97 என்ற அளவில் குறைக்க முடியும். ஆனால், மக்களிடம் பகல் கொள்ளை அடிப்பதற்காகவே பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பது மட்டுமின்றி, கலால் வரியையும் மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
உணவுப் பொருட்களின் விலை 3.88 விழுக்கhடு அளவு உயர்ந்து இருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போய் மக்கள் அல்லல் படும் நிலைமை உருவாகும். எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசும் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த ஒன்றரை மாதத்தில் ஐந்தாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.72 உயர்த்தப்பட்டு, ரூ.65.96&க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.88 உயர்த்தப்பட்டு ரூ.56.95&க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனில் அக்கறையின்றி எண்ணெய் நிறுவனங்கள் செய்யப்பட்டுள்ள இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல், டீசல் மீதான விலை நிர்ணயக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சந்தை நிலவரத்துக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நாளிலிருந்தே, எரிபொருள் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போய்விட்டது. தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக கடந்த ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு உலக சந்தையில் கச்சா எண்ணெயின் சராசரி விலை பீப்பாய்க்கு 47.61 டாலராக (ரூ.3191) இருந்தது.
அதைத்தொடர்ந்து ஜூன் 15&ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.09 ஆகவும், டீசல் விலை ரூ.56.78 ஆகவும் உயர்த்தப்பட்டது. இப்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கச்சா எண்ணெயின் சராசரி விலை அதைவிட குறைவாக இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அப்போது இருந்ததை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது, அதனால் கிடைக்கும் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வின் மூலம் பறித்துக் கொள்ளும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலோ அல்லது முகவர்களின் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டாலோ அந்த சுமையை மட்டும் வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவது இரக்கமற்ற செயலாகும். கடந்த 45 நாட்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி 4 முறை, முகவர் கமிஷனை காரணம் காட்டி ஒரு முறை என மொத்தம் 5 தவணைகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.31 ரூபாயும், டீசல் விலை 5.30 ரூபாயும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாததாகும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்ட ஏராளமான வழிகள் இருக்கும் போதிலும், பெட்ரோல், டீசல் மீது அளவுக்கு அதிகமான வரி விதிப்பதன் மூலமாகவே பெருமளவு வருவாயை ஈட்ட அரசுகள் துடிக்கின்றன. உதாரணமாக இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை, கச்சா எண்ணெய் மீதான வரியையும் சேர்த்து ரூ.24.32 மட்டுமே. ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது மத்திய, மாநில அரசுகளின் வரி, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களின் லாபம் ஆகியவை மட்டும் ரூ.31.54 ஆகும். அதேபோல், டீசலின் அடக்கவிலை ரூ.25.66 ஆக இருக்கும் நிலையில், அதன் மீதான வரி மற்றும் லாபமாக மட்டும் ரூ.30.29 வசூலிக்கப்படுகிறது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசலின் உற்பத்திச் செலவை விட அவற்றின் மீது விதிக்கப்படும் வரியின் அளவு அதிகமாக உள்ளது. இரு எரிபொருட்கள் மீதும் 130% வரை பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்படுவது மக்களை கொள்ளையடிப்பதற்கு சமமானதாகும்.
ஒருபுறம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறும் மத்திய அரசு, மற்றொருபுறம் பணவீக்கத்தை அதிகரிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திக் கொண்டே செல்வது என்ன வகையான பொருளாதார உத்தி என்பது தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். இந்த சாதாரண உண்மையை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே, பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை ரத்து செய்து, மத்திய அரசிடமே அந்த அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

0 Responses to பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்