2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வியென்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதாவது, “2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில் 13 ஊடகவியாலர்கள் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை, 87 ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, ஐந்து ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை 13 ஊடகவியலாளர்கள் படுகொலை: சாகல ரத்நாயக்க