அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொண்டு வளம் மிக்க வரவு- செலவுத் திட்டத்தினை நல்லாட்சி அரசாங்கம் முன்வைத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டினை அபிவிருத்திக்கான ஆண்டாக அடையாளப்படுத்தியுள்ள அரசாங்கம், அதனை முன்னிறுத்தியே வரவு- செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் தற்போது (இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30) நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்படுகின்றது. அதன்போதே, நிதியமைச்சர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
காணி, சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும் என்றும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பிரச்சினைகள் தொடர்பில் தனித்தனியாக அவதானம் செலுத்தப்பட்டு தீர்வுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் நிதியமைச்சர் வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து வருகின்றார்.

0 Responses to 2017 அபிவிருத்திக்கான ஆண்டாகும்; வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து நிதியமைச்சர் உரை!