“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் வடக்கில் 'ஆவா' குழுவினை இயக்கி வரும் இராணுவ அதிகாரி யார் என்பதனை நான் அறிவேன். எனினும், அவரது பெயர் விபரங்களை அம்பலப்படுத்த நான் விரும்பவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரியொருவர் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்காக ஒட்டுமொத்த இராணுவத்துக்கும் அதனுடன் தொடர்புடையதாக கூறிவிட முடியாது. எனது கருத்தினை தவறாக திரிபுபடுத்திய பின்னர், ஆவா குழுவுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இல்லையென பலரும் விளக்கமளிப்பது அனாவசியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கில் இயங்கி வரும் 'ஆவா' குழுவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே தொடர்புகள் இல்லையென்பதனை தன்னால் உறுதியாக கூற முடியும் என்றும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் வடக்கில் அமைதியின்மையை உருவாக்குவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளும் சதியே இந்த ஆவா குழு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to 'ஆவா' குழுவினை இயக்கி வரும் இராணுவ அதிகாரியை நான் அறிவேன்: ராஜித சேனாரத்ன