எகிப்தில் அந்நாட்டு அதிபர் அப்டெல் ஃபட்டாஹ் அல் சிசி இனையும் சவுதி இளவரசரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும் சினாய் தீபகற்பத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் 292 ஜிஹாதிஸ்ட் ஆதரவாளர்களிடம் எகிப்து விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
இந்த 292 பேரில் 151 பேர் தற்போது போலிஸ் கஸ்டடியில் வைக்கப் பட்டுள்ளதுடன் ISIS உடன் தொடர்புடைய சினாய் ஸ்டேட் என்ற அமைப்பின் உறுப்பினர்களாக இவர்கள் இருப்பதால் இராணுவ நீதிமன்றத்தில் இவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகின்றது.
சுமார் ஒரு வருடமாக நீடித்த விசாரணையில் 66 பேர் தமது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு எகிப்தின் இஸ்லாமிய அதிபரான மொஹம்மட் மோர்ஸியை இராணுவம் பதவி நீக்கம் செய்ததை அடுத்து எகிப்து இராணுவம் வடக்கு சினாய் தீபகற்பத்தில் போராளிக் குழுக்களின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இத்தாக்குதல்களில் இதுவரை நூற்றுக் கணக்கான போலிசாரும் இராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளதுடன் தலைநகர் கெய்ரோ மற்றும் நைல் நதி கரையோரங்களிலும் போராட்டம் பரவி இருந்தது. பெரும்பாலான இது போன்ற தாக்குதல்களுக்கு எகிப்தில் இயங்கும் ISIS இன் நட்பு ஜிஹாதிஸ்ட் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஆக்டோபரில் சினாய் தீபகற்பத்தின் மீது பறந்த ரஷ்ய விமானம் இந்த ஜிஹாதிஸ்ட் அமைப்பால் சுட்டு வீழ்த்தப் பட்டது. இதில் பெரும்பாலான ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் உட்பட பயணம் செய்த அனைத்து 224 பயணிகளும் கொல்லப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to எகிப்து அதிபர் சிசியைக் கொல்லத் திட்டமிட்ட சந்தேகத்தில் 292 பேர் விசாரணை