மியான்மாரில் சிறுபான்மையினத்தவரான றோஹிங்கியா முஸ்லிம் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 30 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆக்டோபர் மாதம் தொடக்கம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வரும் ராக்கைன் மாநிலத்தில் மியான்மார் இராணுவம் கடும் போரில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தான் கடந்த இரு நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் மட்டும் 30 பேருக்கும் அதிகமாகப் பலியானதாகத் தெரிய வருகின்றது.
மியான்மாரில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 10 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் மீது மியான்மார் அரசினால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகக் கடும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் ராக்கைன் மாநிலத்தில் என்ன நடைபெறுகின்றது என வெளி உலகுக்குத் தெரியா வண்ணம் அங்கு பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மியான்மாரில் றோஹிங்கியா போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மோதலில் 30 பேர் பலி