புதிய 500 ரூபாய் நோட்டுகள் சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
சென்னைு, நாசிக் ஆகிய இடங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்துக்கு 500 ரூபாய் நோட்டுகள் எப்போது வரும்? என்று பொதுமக்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது
விமான நிலையத்தில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் 2 கண்டெய்னர்களில் பணம் கொண்டு வரப்பட்டது. அதில் எவ்வளவு தொகை இருக்கிறது? என்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை.உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததும், இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.
அதன் பிறகு வங்கிகள், புதிய 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்களுக்கு வினியோகிக்கும்.தற்போது ரூ.2,000 நோட்டுக்கு அடுத்து குறைவான மதிப்புடைய பணமாக 100 ரூபாய் நோட்டு உள்ளது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கையில் இருந்தாலும் சில்லறை கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த உடன் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to சென்னைக்கு விமானத்தில் வந்த 500 ரூபாய் புதிய நோட்டுகள்!