வடக்கு - கிழக்கினை பிரிவினைவாதிகளிடம் கையளிப்பதன் மூலம், அங்குள்ள (வடக்கு- கிழக்கிலுள்ள) சிங்கள மக்களை சிறுபான்மையினராக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மணலாற்று பகுதியில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கிலுள்ள சிங்கள மக்களான நீங்கள், சிறுபான்மையினராக இன்று மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை. வடக்கு கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி தமிழர்களை பிரதானியாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டுவருவது தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் கொள்கை ரீதியில் சமஷ்டி ஆட்சி முறையை கொண்டுவருவதை முழுமையாக எதிர்க்கிறோம் என நாம் தெளிவாக கூறியுள்ளோம்.
30 வருட யுத்தத்தின் பின்னர் ஒன்றிணைத்த நாட்டை மீண்டும் துண்டு துண்டாக பிளவுபடுத்தும் செயற்பாடே இதன் ஊடாக இடம்பெறும். இதற்கு எங்களால் இடம்கொடுக்க முடியாது. ஆகவே அதற்காக எமது பலத்தை கொண்டு நடவடிக்கை எடுப்போம்.
அவர்கள் அனைத்து அதிகாரங்களையும் கேட்கின்றனர். பகிரப்பட்ட அதிகாரம், பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் கேட்கின்றனர். இதுவொரு சிறிய நாடு, அவ்வாறு பிரிப்பதற்கு முடியாது. அமெரிக்கா போன்று இந்தியா போன்று மிகப் பெரிய நாடு அல்ல.
இலங்கை அவர்களின் நாடு என இந்தியாவிலுள்ள சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் வேண்டியவாறு பிளவுபடுத்தி, பிரிக்க முடியும் என அவர்கள் நினைக்கின்றார்கள்” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கிலுள்ள சிங்கள மக்களை சிறுபான்மையினராக்க அரசாங்கம் முயற்சி: மஹிந்த