அமெரிக்கர்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக தான் பணியாற்றுவேன் என்று 45வது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து, குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
வெற்றிக்குப் பின்னர் நியூயோர்க்கில் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரை ஆற்றினார்.
அதில், “அமெரிக்காவின் ஜனாதிபதியாக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு முதன் முதலாக ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
ஜனாதிபதி தேர்தலின் 8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். ஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார். இனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை நனவாக்கலாம்.
நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக பணியாற்றுவேன். ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது. அமெரிக்காவை நண்பனாக நினைத்து நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம். ” என்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்பார்.

0 Responses to “அமெரிக்கர்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக பணியாற்றுவேன்”; வெற்றி உரையில் டொனால்ட் ட்ரம்ப்!