அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி 45வது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார். பராக் ஒபாமா என்கிற அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பதவி வகித்த பின்னர், இனவாத அடிப்படை வாதத்தினை முன்மொழிந்து வந்து டொனால்ட் ட்ரம்ப் அந்தப் பதவிக்கு வருகின்றார்.
தொழில் முறையில் வர்த்தகரான டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டது முதல், உட்கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியிட்டது ஈறாக, ஜனாதிபதித் தேர்தல் வரை அவர் சற்று கோமாளியான ஒருவராக ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்டார். அவரும், அவ்வாறான நடத்தைகளில் மும்முரமாக ஈடுபட்டார். அவர், எதிர்கொண்டது ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், சர்வதேச ரீதியில் இராஜதந்திர பணிகளின் பெரும் அனுபவம் பெற்றவரும், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டனையாகும்.
சர்வதேசம் ஹிலாரி கிளிண்டனுக்கு சரியான போட்டியாளராக டொனால்ட் ட்ரம்பினைக் கருதவில்லை. ஊடகங்களின் தொடர் விமர்சனங்களை இருவரும் எதிர்கொண்டிருந்தாலும், குறிப்பிட்டளவான நம்பிக்கைகளை ஹிலாரி கிளிண்டனை நோக்கியே ஊடகங்கள் வெளியிட்டன. கருத்துக் கணிப்பு முடிவுகளும் அவ்வாறே அமைந்தன. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் இறுதியாக வெற்றி பெற்றார். உலக ஊடகங்கள் அதிர்ச்சியை வெளியிட்டன. தெற்காசிய உள்ளிட்ட வெளிப்பரப்பு அமெரிக்கர்களைப் பெரும்பாலும் திட்டித் தீர்த்தது. சமூக ஊடகங்களில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி ‘பெரும் சாபத்தின்- ஜனநாயக அழிவின் வெற்றி’ என்று விமர்சிக்கப்பட்டது.
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற அன்றே நியூயோர்க் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பெரும் ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடத்தினர். பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டங்களை கலைக்க வேண்டிய ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அண்மைய காலத்தில் இவ்வாறான காட்சிகளைக் காண முடியவில்லை. ஆனால், ட்ரம்பின் வெற்றி இதையும் பதிவு செய்திருக்கின்றது.
இனவாதமும், அடிப்படைவாதமும் கோலொச்சிய தேர்தலையே அமெரிக்கா இம்முறை பதிவு செய்தது. அத்தோடு, 44.4 வீதமான வாக்களாளர்கள் வாக்களிக்காது தேர்தலைக் கிட்டத்தட்ட புறக்கணித்த ஒரு நிலையையும் காண முடிந்தது. இது, இரு வேட்பாளர்களின் மீதான நம்பிக்கையீனங்களின் போக்கில் நிகழ்ந்தது.
இந்த இடத்தில், டொனால்ட் ட்ரம்பின் வெற்றி இலங்கையில் கடந்த வருடம் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட ராஜபக்ஷக்களுக்கு பெரும் நம்பிக்கைளித்திருக்கின்றது. குறிப்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் ட்ரம்பின் வெற்றியைத் தொடர்ந்து தென்னிலங்கையை நோக்கி இனவாத அடிப்படைவாத்தின் செய்திகளைச் சொல்லியிருக்கின்றார்கள்.
ட்ரம்பின் வெற்றியானது உள்நாட்டு இறைமைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றது என்று கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, உள்நாட்டு இறைமை என்பது பெரும்பான்மையின மக்களின் அடிப்படைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். அவரது சகோதரரோ, பெரும்பான்மையினமும், சிறுபான்மையினமும் தனித்தே இயங்க வேண்டும். அப்போதுதான், இரு தரப்பிற்கும் நன்மையளிக்கும் என்றிருக்கின்றார். அத்தோடு, அமெரிக்கர்களைப் பார்த்து தென்னிலங்கையிலுள்ளவர்கள் திருந்த வேண்டும் என்கிற அடிப்படைகளையும் வெளிட்டுள்ளார்.
மக்கள் சார்ப்பு நிலைப்பாடுகள், மனித உரிமைகள் மீதான அர்ப்பணிப்பு, நீதித்துறை மீதான உறுதி உள்ளிட்ட ஜனநாயக மாண்புகள் பற்றி அதிகம் கவனத்தில் கொள்ளாமல், இன அடிப்படைவாதமும் பெரும்பான்மை வாதமும் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்க வேண்டும் என்பதை ராஜபக்ஷக்கள் மீண்டும் வேண்டி நிற்கின்றார்கள். அதை மறுதலிக்கும் தரப்புக்களை நோக்கி கேலியான தோரணையோடு பேச எத்தணிக்கின்றார்கள். அதன்போக்கிலேயே டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை தென்னிலங்கையை நோக்கி எடுத்து வருகின்றார்கள். அது, எதிர்காலத்தின் அரசியல் வெற்றிகளுக்கு உதவும் என்றும் நம்புகின்றார்கள்.
டொனால்ட் ட்ரம்பின் அடிப்படைவாதக் கொள்கைகளை அமெரிக்கா முழுமையாக அமுல்படுத்தி சர்வதேச ரீதியில் தான் கொண்டிருக்கின்ற வல்லரசு நிலையையும், அழுத்தம் கொடுக்கும் நிலையையும் நீக்கிக் கொள்ளும் என்று கருத முடியாது. அப்படிப்பட்ட நிலையில், ட்ரம்ப் அமெரிக்காவின் இராஜதந்திர தரப்பினால் எவ்வாறு கையாளப்படப் போகின்றார் என்பதையும், அடுத்த 4 வருடங்களின் அவரின் உண்மையான வகிபாகம் எது சார்ந்தது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தல் மேடைகளில் அவர் வெளியிட்ட அடிப்படைவாத நிலைப்பாடுகளில் குறிப்பிட்டளவான மாற்றத்தினை அவர் நிச்சயம் செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், வெற்றிக்கு அப்பாலான இயங்கம் என்பது பல நேரங்களில் மாறுபட்டவை. அப்போது, ராஜபக்ஷக்கள் டொனால்ட் ட்ரம்பையோ அவர் பெற்ற வெற்றியையோ உதாரணமாகக் காட்டிக் கொள்ள முடியாது போகலாம்!.
4tamilmedia.com

0 Responses to டொனால்ட் ட்ரம்பின் வெற்றியும் ராஜபக்ஷக்களின் அங்கலாய்ப்பும்!