சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றைக்குமே இணங்காது என்று அந்தக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரும் போக்குவரத்து அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக சமஷ்டி ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அத்தோடு, வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படுவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது, சமஷ்டி முறையிலான ஆட்சிக்கு செல்லும் முனைப்புக்கள் சார்ந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து இன சமூகங்களும் ஒன்றிணைந்து சமாதான வாழ வேண்டும் என்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு. புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்தே அரசியல் சாசனத்தை உருவாக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to சமஷ்டி தீர்வுக்கு சுதந்திரக் கட்சி இணங்காது: நிமல் சிறிபால டி சில்வா