நல்லதொரு நாட்டை உருவாக்குவது தொடர்பிலான குறிக்கோள்களைச் சுற்றி தடைகள் பல காணப்பட்டாலும் அதனை வெற்றிகொள்ளும் மனோதிடம் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ராவய பத்திரிகையின் முப்பது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற அறிஞர்கள் கருத்தாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ராவய உள்ளிட்ட ஊடகங்களின் விமர்சனங்களுக்கு நான் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகிறேன். அனைவரினதும் மரியாதைக்கும் நம்பிக்கைக்குமுரிய அழகிய நாட்டைக் காண்பதே ராவய பத்திரிகையைப் போன்று என்னுடைய குறிக்கோளுமாகும். அந்த குறிக்கோளை அடைவதற்கான பயணத்தில் ஒத்தாசையுடனும் புரிந்துணர்வுடனும் பயணித்தால் அப்பயணம் மிக இலகுவானதாக அமையும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை நான் பொறுப்பேற்றது விக்டர் ஐவன் உள்ளிட்ட நீண்டகால நண்பர்கள் பலரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுதல் உட்பட்ட நல்லாட்சி அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அதன்மூலம் கிடைத்த ஒத்துழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to எமது குறிக்கோள்களைச் சுற்றி தடைகள் காணப்பட்டாலும் அதனை வெற்றிகொள்ளும் மனோதிடம் உண்டு: மைத்திரிபால