இன்றைய கியூபாவின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தலைவருமான பிடல் காஸ்ரோ தன்னுடைய 90வது வயதில் காலமானார். இதனை அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
கியூபாவில் 1959இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி பிரதமர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965இல் பதவியேற்ற அவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ, பெப்ரவரி 24, 2008 அன்று பதவியிலிருந்து விலகினார்.
அவர் இறுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களுக்கு உரையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ மரணம்!