வடக்கு - கிழக்கில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக புத்தர் சிலைகளை நிறுவி தேசிய இனத்தின் மூலாதாரமான சமய கலாசாரத்தை இல்லாமல் செய்யும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு யுத்தம் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மீது நேரடியாக யுத்தத்தை நடத்தாமல் பாதுகாப்புத் தரப்பினரும், மகாசங்கத்தினரும் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவுவதன் ஊடாக மதரீதியான தமிழர் குடி பரம்பலை அழிக்கும் யுத்தத்தை ஆரம்பித்துள்ளார்களா?, என்ற சந்தேகம் வலுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தை நேற்று புதன்கிழமை ஆரம்பித்து உரையாற்றும்போதே சிவஞானம் சிறீதரன் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
வடக்கில் நயினாதீவு, இரணைமடு, மாங்குளம், கொக்குத்தொடுவாய் மற்றும் அம்பாறை மாணிக்க மடு, திருகோணமலை ஆத்திமோட்டை, சாம்பல்தீவு சல்லிச்சந்தி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. புதிது புதிதாக அமைக்கப்படுகின்றன புத்தர் சிலைகளை மதத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்பாகவே மக்கள் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடங்களில் புதிதாக இந்து ஆலயங்கள் அமைப்பதையே நாம் எதிர்க்கின்றோம். ஏனெனில் புதிதாக ஒன்றை அமைப்பதாயின் அது அங்குள்ள மக்களின் விருப்பத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டியதாகும். தற்பொழுதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நிராகரிக்காதபோதும், புதிய அரசியலமைப்பிலும் இதே நிலைமை காணப்படுமாயின் அது மோசமான சூழ்நிலையையே ஏற்படுத்தும். இவ்விடயத்தில் அரசாங்கம் துணிச்சலுடன் செயற்படும் வரையில் புத்தர் சிலைகள் தமிழர் பகுதிகளில் வைக்கப்படுவதையும், அளவில் சிறிய ஏனைய தேசிய இனங்கள் அச்சத்துடன் வாழும் சூழலையும் மாற்ற முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புத்தர் சிலைகளை நிறுவி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது: சிறீதரன்