மீண்டும் குழப்பவாதிகள்.. உண்மையை உணருங்கள் மக்களே!
தேசிய மாவீரர் நாள் 2016 பிரான்சு வழமைபோல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் ஒழுங்கு செய்யப்பட்டு அதற்கான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த துண்டுப்பிரசுரங்களில் எங்களால் கொடுக்கப்பட்ட முகவரியை நீக்கிவிட்டு புதிய முகவரி இட்டு போலிப் பிரசுரங்கள் குழப்பவாதிகளால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மக்களாகிய நீங்கள் விழிப்பாய் செயற்படல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் நடாத்தப்படும் தேசியமாவீரர் நாள் எம்மால் அறிவிக்கப்பட்ட,
30 Route de Grosley 95200 Sarcelles, என்னும் முகவரியில்தான் நடைபெறும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம். 2012, 2013 ம் ஆண்டுகளில் இரண்டாவது மாவீரர் நாள் நடாத்தியதுபோல் இவ்வாண்டும் இரண்டாவது மாவீரர்நாள் நடாத்தி மக்களுக்கிடையில் குழப்பத்தை விளைவிக்க எத்தனிக்கிறார்கள். 2012, 2013 இல் மண்டபம் எடுத்து நடாத்துவது பிழையயன்று கூறி லாக்கூர்நோவ் பூங்காவிலும், வன்சன் காட்டிற்குள்ளும் நடாத்தியவர்கள் இன்று மண்டபம் எடுத்து இரண்டாவது மாவீரர் நாள் நடாத்துவதாகத் தெரிகின்றது.
மக்களுக்கும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் உள்ள உறவைக் குழப்புவதற்கு எதிரி பல வழிகளில் முயற்சித்துக்கொண்டிருகின்றான் என்பது வெளிப்படை. இதில் மக்களே விழிப்பாய் இருங்கள்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

0 Responses to பிரான்சு வாழ் மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் முக்கிய அறிவித்தல்