அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு தொடர்ந்தும் முன்னுரிமை அளிக்கும் நிலையே காணப்படுகின்றது. சிறுபான்மையினரை இரண்டாந் தரப்பிரஜைகளாகத்தான் பிரதான கட்சிகள் மதிக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தினை பாராட்டிக் கௌரவிக்கும் விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கரவெட்டியில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் பல தடைகளைத் தாண்டிச்செல்லவேண்டிய தேவையும் உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதற்கடுத்ததாக சர்வஜன வாக்கெடுப்பு என்ற தடையும் உள்ளது. இவை அனைத்தையும் தாண்டி நியாயமான ஒரு தீர்வு கிடைத்தால் நாம் அதனை நிச்சயமாக வரவேற்போம். ஆனால் அதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றனவா? அதனை நாம் எவ்வாறு உருவாக்கப்போகின்றோம்? வெறுமனே மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டிருப்பதால் என்ன பலன்? எனவே எமது நிலை கவலைக்கிடமாக இருக்கும் நேரம் இது.” என்றுள்ளார்.




0 Responses to அரசியலமைப்பு முனைப்புக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்