கலெக்டர் அலுவலகத்தில் 35 ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றவருக்கு, கலெக்டர் ஒரு நாள் டிரைவராக மாறி கார் ஓட்டிய சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் 35 ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றவருக்கு, கலெக்டர் ஒரு நாள் டிரைவராக மாறி கார் ஓட்டிய சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் கார் டிரைவராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர் திகாம்பர் தாக்(58).
இவர் தனது பணிக் காலத்தில் 18 கலெக்டர்களுக்கு கார் ஓட்டியுள்ளார். திகாம்பருக்கு நேற்று பணியில் இருந்து ஓய்வு பெறும் நாள். அவருக்கு கலெக்டர் அலுவலகம் சார்பில், பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நாளான நேற்று வழக்கம் போல் கலெக்டர் காந்தை அழைத்து வர அவரது இல்லத்துக்கு திகாம்பர் சென்றார். அப்போது, கலெக்டர் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வீட்டிலிருந்து இருந்து வந்த கலெக்டர் காந்த், டிரைவர் திகாம்பரை காரின் பின் சீட்டில் உட்காருமாறு கூறினார். தயக்கத்துடன் அவர் பின் சீட்டில் அமர்ந்தார். இதையடுத்து, காரை கலெக்டர் ஓட்டினார். கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபசார விழாவுக்கு டிரைவரை கலெக்டரே அழைத்து சென்றார். விழாவில் திகாம்பரின் பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
ஓய்வுபெற்ற டிரைவருக்காக மாவட்ட கலெக்டர் கார் ஓட்டி சென்ற சம்பவம் டிரைவர் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிவர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கலெக்டர் காந்த் கூறுகையில், ‘‘35 ஆண்டுகளாக அரசு பணியை திகாம்பர் திறம்பட செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் கலெக்டர்களை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளார். அவரது பணிக்கு, நன்றி செலுத்தும் விதமாகவும் அவருக்கு கார் ஓட்டினேன்’’ என்றார்.

0 Responses to ஓய்வு பெற்ற டிரைவருக்கு மரியாதை