கொழும்பு வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு கோரி பொதுமக்களிடம் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள படிவங்களை நிரப்ப வேண்டாம் என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் விநியோகிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கோரும் படிவங்களை, அங்கு குடியிருப்பவர்களால் பூரணப்படுத்தப்பட வேண்டியதில்லை. வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில விஜேமன்னவுக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கும், இது தொடர்பில் நான் பணித்துள்ளேன்.
சட்டத்துக்குப் புறம்பான, நைஜீரியாவைச் சேர்ந்த சிலர், வெள்ளவத்தையில் வசித்து வருவதாகவும், அவர்களைத் தேடுவதாகவும் வெள்ளவத்தைப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அவ்வாறான தகவல்கள் இருக்குமாயின் அவற்றை வழங்குமாறு குடியிருப்பாளர்களைக் கோருமாறு, நான் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளேன்.
ஆனால், பொதுவான தகவல்களைக் கோர வேண்டாமெனத் தெரிவித்தேன். அவ்வாறான பூரணமான தகவல்களை வழங்குவதனூடாக, கடந்த காலங்களில் எம்மக்கள், கஷ்டங்களை எதிர்கொண்டிருந்தார். அவ்வாறான தகவல்களைக் கோருவதற்கான தேவையெதும் தற்போது கிடையாது.” என்றுள்ளார்.

0 Responses to பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டாம்: மனோ