வடக்கு - கிழக்கில் மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இராவண பலய (சக்தி) என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்றும் அந்த அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
இராவணா பலயவின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அந்த அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேற்கண்டாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனிக்கின்ற நிலையில், தெற்கில் சிறிய சம்பவம் என்றாலும் கைதுகள் இடம்பெறுகின்றன.
புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாட்டினையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் முன்வரவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: இராவண பலய