மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மறைந்த தலைவர் ரோஹண விஜயவீரவை நினைவு கூர முடியுமாக இருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏன் நினைவு கூர முடியாது? என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும், மாவீரர் தினம் அனுஷ்டிப்பு என்பது தனித் தமிழீழ அனுஷ்டிப்பாக தொடர்வதை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ்டிக்கின்றனர். இதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரபாகரன் உயிர்நீத்த தினத்தை அனுஷ்டிப்பதில் என்ன தவறு? அதில் தவறேதும் இல்லை. ஜே.வி.பி.யும் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது.
பிரபாகரன் இறந்த தினம் அனுஷ்டிக்கப்படலாம். அதேவேளை யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை அனுஷ்டிப்பது தார்மீக கடமை. அதற்கு தடைவிதிக்கலாகாது. ஆனால், அதன் போர்வையில் இலங்கைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை நினைவு கூருவதும், தனித் தமிழீழத்தை நினைவு கூருவதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. இந்த இரண்டு விடயங்களும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to மாவீரர் தினம் தமிழீழத்துக்கு வழி வகுக்கும்: வாசுதேவ நாணயக்கார