ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்து உள்ளது.
நீதிமன்றம் போல ஷரியத் கவுன்சில் செயல்பட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் போலவோ, கட்டப்பஞ்சாயத்து செய்வதிலோ ஷரியத் கவுன்சில் ஈடுபடக்கூடாது. மேலும் ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் அதைத் தடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்துல் ரகுமான் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள், நீதிமன்றங்கள் போல் செயல்படுவது தெரிய வந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர், ஷரியத் கவுன்சில்கள் நீதிமன்றங்கள் போல் செயல்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு திருவல்லிக்கேணி துணை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில் அனைவரும் விருப்பப்பட்டு தான் ஷரியத் கவுன்சிலுக்கு செல்கின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய நீதிபதிகள், புதிய பதில் மனுவை, நான்கு வாரங்களில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும், மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள், கட்ட பஞ்சாயத்து, நீதிமன்றங்கள் போல் செயல்படுவது தெரிய வந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

0 Responses to ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும்: நீதிமன்றம்