இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவில் அமைந்துள்ள அக்கெஹ் மாகாணத்தில் புதன்கிழமை 6.5 ரிக்டரில் தாக்கிய பாரிய பூகம்பத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஐக் கடந்துள்ளதாகவும் மேலும் 200 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய அனர்த்த முகாமைப் பிரிவு அறிவித்துள்ளது.
அதிகாலையில் முஸ்லிம் மக்கள் பெரும் திரளாக தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பிடியே ஜெயா மாவட்டத்தை மையம் கொண்டு இந்த பூகம்பம் தாக்கியுள்ளது. இந்த பூகம்பத்தால் பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் உடைந்த பாகங்களுக்குள்ளே இன்னமும் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் பலர் உள்ளே சிக்கி இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப் படுகின்றது. மீட்புப் பணியில் 1000 படை வீரர்களும் 900 போலிசாரும் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக் கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் சேதம் அடைந்திருப்பதால் பல மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளதுடன் அவர்களுக்கு உணவு குடிநீர் போன்ற அடிப்படைப் பொருட்கள் தேவைப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பல இடங்களில் மின் துண்டிக்கப் பட்டுள்ளதுடன் சில இடங்களில் மாத்திரமே ஜெனெரேட்டர் போன்ற வசதிகள் உள்ளதாகவும் பாதிக்கப் பட்ட பகுதிகளில் கனமழை பெய்யுமானால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனவும் அனர்த்தம் முகாமை அமைப்பின் தலைவர் புட்டெஹ் மனாஃப் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்படக் கூடிய தொடர் அதிர்வுகள் குறித்த அச்சத்தால் பிடியே ஜயாவிலுள்ள ஒரேயொரு வைத்திய சாலையில் கூட பொது மக்கள் சிகிச்சைக்கு செல்லாது இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பொது மக்களில் பலர் சுனாமி அச்சம் காரணமாக உயரமான பகுதிகளுக்கு சென்ற போதும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. 2004 ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தாலும் அதன் விளைவால் ஏற்பட்ட சுனாமியாலும் இந்தோனேசியாவில் மாத்திரம் 170 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை விட பசுபிக் சமுத்திரத்தில் உள்ள ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதுடன் அங்கு அதிக உயிர் எரிமலைகளும் காணப்படுகின்றன. இதனால் அங்கு வருடாந்தம் எரிமலை செயற்பாடும் பூகம்பங்களும் பல நிகழ்வதற்கு ஏதுவாக உள்ளது.

0 Responses to இந்தோனேசியாவைத் தாக்கிய பாரிய பூகம்பத்தில் 97 பேருக்கும் அதிகமானவர்கள் பலி