புதன்கிழமை பாகிஸ்தான் நேரப்படி 3:30 மணிக்கு 47 பயணிகளுடன் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் சிட்ரல் இலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி பயணித்த பாகிஸ்தானின் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானமான PK-661 அப்பொட்டாபாட் இற்கு அருகே உள்ள ஹவெலியான் என்ற கிராமத்தில் தீப்பிடித்து கீழே வீழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் அறிவித்துள்ளன.
விமானம் விபத்தில் சிக்கிய பகுதியில் பாகிஸ்தான் இராணுவமும் ஹெலிகாப்டர்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டன. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைத்துப் பயணிகளும் இறந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து புறப்பட்ட தனியார் விமான சேவையான ஏர்புளூ ஏர்லைனின் ஏர்பஸ் 321 விமானம் இஸ்ல்லாமாபாத்துக்குப் புறத்தே மலைப் பகுதியில் மோதி விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்திருந்த 152 பேரும் கொல்லப் பட்டிருந்தனர்.
இந்த விபத்துக்கு குழப்பநிலை அடைந்த கேப்டனும் சாதகம் அற்ற காக்பிட் சூழலும் காரணமாக இருந்தன என்று குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டிருந்தது.

0 Responses to 47 பயணிகளுடன் பாகிஸ்தான் விபத்து விபத்தில் சிக்கியது