Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினரும் கடந்த திங்கட்கிழமை முதல் வவுனியாவில் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளான நேற்று வியாழக்கிழமை மாலை, அரசாங்கத்தின் வாக்குறுதிகளை அடுத்து கைவிடப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 14 பேரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினருடன் எதிர்வரும் 09ஆம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் காலை 11.00 மணிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், நீதித்துறை அமைச்சர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பேச்சுக்களை நடத்தி இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக எழுத்து மூலம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி மொழி வழங்கியதையடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட இணங்கினர். அதன்பின் நீராகாரம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு, சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்' ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

0 Responses to அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து வவுனியா உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com