மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக, கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த பெரியசாமி சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரியசாமி சந்திரசேகரனின் மறைவையடுத்து, அவரது மனைவி சாந்தினி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார். இந்த நிலையில், அவர் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டு தன்னுடைய மகளை உயர்பீட உறுப்பினராக்கியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு மலையக மக்கள் முன்னணியின் செயற்தலைவரும் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, அனுஷா தர்ஷினி சந்திரசேகரனுக்கான உயர்பீட அங்கத்துவக் கடிதமும் வழங்கப்பட்டது.
தன்னுடைய தந்தையாரான சந்திரசேகரனின் வழியில் தனது அரசியல் பயணத்தை அனைவருடைய ஆதரவுடனும் முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றேன் என்று அனுஷா தர்ஷினி சந்திரசேகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

0 Responses to மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்!