காணாமற்போனவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் கூறியமை தமிழ் மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மருத்துவ (திருத்த) சட்டமூலம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளதாவது, “காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கடந்த ஏழு வருடங்களாக கண்டிபிடிக்கப்படவில்லை. நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் கூடமுன்னேற்றம் ஏற்படவில்லை. இது ஜனநாயக ஆட்சி குறித்து கேள்வியைத் தோற்றுவிக்கிறது.
தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் உதாரணங்கள் உள்ளன. குமாரபுரம் படுகொலையில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர். அது மட்டுமன்றி ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்களும் விடுவிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் நீதி கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் சாகும் தறுவாயில் உள்ள உண்ணாவிரதிகளின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூறவேண்டும்.
வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட 686 பேர் காணாமற்போயுள்ளனர். இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் தமது கணவன்மார், பிள்ளைகளை ஒப்படைத்தமைக்கான சாட்சியங்கள் காணப்படுகின்றன. காணாமற்போன விடயத்துக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்திருந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மக்கள் முடிந்தளவு விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டுள்ளனர். எனினும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு வலிகள் புரியாது.
எனவேதான் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டது. எனினும், உள்நாட்டில் விசாரணை நடத்துவோம், இதற்காக காணாமற்போனோர் அலுவலகமொன்றை அமைப்போம் என்ற உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும் அலுவலகத்தை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இன்னமும் ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கிறார். அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கிறது. காணாமற்போனவர்களின் விவகாரத்துக்கு நியாயம் கோரி உண்ணாவிரதம் இருப்பவர்களின் உயிர்களையும் பறிப்பதற்கா அரசாங்கம் விரும்புகிறது.” என்றுள்ளார்.

0 Responses to ‘காணாமற்போனவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம்’ என்கிற பிரதமரின் கூற்று ஏமாற்றமளிக்கிறது: சிறீதரன்