Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களை நாடு கடத்த வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, இலங்கையின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸார் உட்பட சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய ரணில் – மைத்ரி அரசாங்கத்திலும் வெள்ளை வான் கடத்தல்கள் மாத்திரமன்றி கைது செய்யப்படுபவர்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பான குழு வெளியிட்டுள்ள 24 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “படைத்தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கட்டமைப்பு ரீதியான விசாரணை செய்வதற்கு முடியாமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீன நிறுவனமாக இயங்காமை ஆகிய விடயங்கள் நீதியை நிலை நாட்டு வதற்கு பெரும் தடையாக இருக்கின்றது.

தற்போதைய சட்ட கட்டமைப்பு இராணுவம் உட்பட முப்படையினர் பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தாமையால் சித்திரவதைகள் தொடரக்கூடிய ஆபத்து நீடித்து வருகின்றது.” என்றுள்ளது.

0 Responses to இலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக் கூடிய தமிழ் மக்களை நாடு கடத்த வேண்டாம்; வெளிநாடுகளிடம் ஐ.நா. கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com