Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அலங்காநல்லூரில் வருகிற 10 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் போட்டியில் கலந்து கொண்டு வீரர்கள் காளையை அடக்கினால் விலை உயர்ந்த கார், என்பீல்டு பைக், டிராக்டர், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று விழாக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு போட்டியை காண தனி கேலரி அமைக்கப்படும் என்றும் விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, பீரோ, கட்டில் ஆகிய பரிசுகள் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை வெற்றி பெறுபவர்களுக்கு கார் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மாடுபிடி வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்குது.

0 Responses to அலங்காநல்லூரில் வருகிற 10ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி: கார் பரிசு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com