தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் அ.தி.மு.கவும் எதிர்க்கட்சியான
தி.மு.கவும் நடந்து கொள்ளும் விதத்தை அரசியல் விமர்சகர்கள் பெரிதும்
வரவேற்கின்றனர்.
இதுநாள் வரையில் தி.மு.கவும் அண்ணா தி.மு.கவும் நடத்தி வந்த அரசியல்
என்பது அப்பாவுடனும் ஜெயலலிதாவுடனும் போகட்டும். நாம் அந்த அரசியலைக்
கையில் எடுக்க வேண்டியதில்லை'என மனம் திறந்து பேசியிருக்கிறார் தி.மு.க
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 23-ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடந்து
வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அ.தி.மு.கவும்
தி.மு.கவும் கடுமையாக மோதிக் கொள்வதைத்தான் மக்கள் பார்த்து
வந்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக, தனிமனித தாக்குதல்கள், தலைவர்
மீதான விமர்சனங்கள், சண்டைகள் என எதற்கும் இடமில்லாத வகையில் சபை நடந்து
வருகிறது.
ஸ்டாலின் செயல்பாட்டை பேரவைத் தலைவர் பாராட்டுவதும் நடக்கிறது. சபைக்குள்
தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் இருந்தாலே, சண்டையில்தான் முடியும். கடந்த
27-ம் தேதி அன்பழகனின் பேச்சைப் பாராட்டினார் முதலமைச்சர்
பன்னீர்செல்வம். கடந்த இரண்டு நாட்களாக, பேரவையில் அமைச்சர்களோடு தி.மு.க
எம்.எல்.ஏக்கள் மோதினாலும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது, நாகரிகமான
அவையைக் காண முடிகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
வடநாட்டு அரசியலைப் போலவே, தமிழக அரசியலிலும் வெறுப்பு அரசியல் மறைந்து
வருவது என்பது வரவேற்கத்தகுந்தது. ஆனால், இவ்வாறு நடந்து கொள்வது என்பது
அரசியல் அறுவடையை சிறப்பாக நடத்தி முடிக்கத்தான் என்பதில் மாற்றுக்
கருத்தில்லை.
ஜெயலலிதாவுக்குப் பிறகு, அ.தி.மு.கவில் நடந்த மாற்றங்களும் அரசு
அதிகாரத்தில் மத்திய அரசின் ஆதிக்கத்தையும் தி.மு.க உன்னிப்பாக கவனித்து
வருகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சசிகலா தரப்பினர்
கொடுக்கும் அழுத்தங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். '
சசிகலாவைவிட பன்னீர்செல்வம் எவ்வளவோ மேல்' என்ற அடிப்படையில்தான்,
அவருக்கு தி.மு.க ஆதரவு கொடுத்து வருகிறது.

0 Responses to தமிழக சட்டப்பேரவையில் அதிமுக - திமுக