Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று சனிக்கிழமையும் தொடர்கிறது.

போராட்டக்காரர்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சற்றுமுன்னர் சந்தித்து கலந்துரையாடினார். மக்கள் சந்தித்துள்ள இன்னல்கள் தொடர்பில் தன்னுடைய ஆதங்கத்தையும் வெளியிட்டுள்ளார்.

கேப்பாபுலவு விமானப்படையின் பிரதான நுழைவாயிலிருந்து பிலவுக்குடியிருப்பு வரை காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால், பேரணி ஒன்றும் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கறுப்புக்கொடிகளை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.

காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது?, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்

இதேவேளை, கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விமானப்படை அதிகாரி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில் காணி விவகாரம் தொடர்பில் கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள விமானப்படையினர் மேலிட உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் உத்தரவு கிடைத்ததும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும், தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களிடம் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோ ரிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐந்தாவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம்; முதலமைச்சர் வருகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com