Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கியிருந்த விமான ஓடுபாதையை பனரமைத்து அதனை பயன்படுத்தும் நோக்கிலேயே முல்லைத்தீவு கேப்பாபுலவில் மக்களின் காணிகளை விமானப்படையினர் அபரித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனாலேயே கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை வழங்க முடியாது என்று விமானப்படையினர் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 84வது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்போதே, முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “அண்மையில் கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மக்களையும், அவர்களுடைய காணிகளையும் பார்வையிட்டேன். இதன்போது, மக்களுடைய குடியிருப்புக்கு அப்பால் தமிழீழ விடுதலை புலிகள் பயன்படுத்திய விமான ஓடுபாதை ஒன்று காணப்பட்டதாகவும், அதனை புனரமைப்பு செய்து தாங்கள் பயன்படுத்துவதற்கு பாதை ஒன்றை அமைப்பதற்காகவே மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், மக்களுடைய காணிகளை வழங்க முடியாது எனவும் விமானப் படையினர் கூறினர்.

இந்த நிலையில் மக்களுடைய குடியிருப்பை தவிர்த்து வேறுவழியாக பாதை அமைத்தால் என்னவெனக் கேட்டபோது, குடியிருப்பு தவிர்ந்த மற்றைய பகுதிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் தங்களுடைய பகுதியாக அறிவித்திருப்பதாகவும் விமானப் படையினர் கூறினார்கள். எனவே, நியாயமான காரணம் இல்லாமலேயே விமானப் படையினர் கேப்பாபிலவு மற்றும் பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை அவர்களுடைய பயன்பாட்டில் வைத்திருக்கின்றார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையை பயன்படுத்தும் நோக்கிலேயே கேப்பாபுலவு காணிகளை விமானப்படை அபகரித்துள்ளது: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com