Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமை வேண்டும். அது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்தில் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் இறுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் கூட போராடிக் கொண்டிருக்கிறோம். இன்றுடன் பத்து நாட்களுக்கும் மேலாக கேப்பாபுலவு மக்கள் தங்களது காணிகளை விடுவிப்பதற்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் எங்களுடைய தலைமைகள் எல்லாம் எங்கே போனது. எனவே அவர்களுக்கு சரியான புதிய தலைமை அவசியம்.

இதேவேளை, தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமாக இருந்தால் அவர்களது உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். 40 வருடங்கள் பல இலட்சம் மக்களின் உயிர்களை தியாகம் செய்து பல்லாயிரக்கணக்கானவர்களை பலி கொடுத்து நாங்கள் சேர்த்து வைத்த அவ்வளவு சொத்துக்களையும் பறி கொடுத்து விட்டு நாங்கள் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு இன்றும் நாங்கள் போர்க்கொடி உயர்த்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கின்றோம். மக்கள் மனசு வைத்தால் எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் ஒன்றும் தோற்றுப் போனவர்களல்ல. நிச்சயமாக தமிழ் மக்கள் வெற்றியடைவார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களுக்கு புதிய தலைமை வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com