உலக நாடுகளுக்கிடையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில், இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூன்றாவது சிறந்த தகவல் அறியும் சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான மத்திய நிலையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள புதிய தரப்படுத்தல் பட்டியலில் இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உலகத்தில் மூன்றாவது சிறந்த தகவல் அறியும் சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்பட்டியலில் இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இதற்கு முன்னர் ஏழாவது இடத்தில் இருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு பின்னர் இது 9வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.
எனினும் கடந்த வாரம் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க வெளியிட்டிருந்த வர்த்தமானியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சட்டம் மற்றும் விதி முறைகளைக் கவனத்திற்கொண்டு இலங்கைக்கு தரப்படுத்தலில் 10 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்பட்டதினால் மற்றைய நாடுகளை பின்தள்ளி இலங்கை மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
சட்டம் மற்றும் நிபந்தனைகள் தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடனும் இணக்கத்துடனயே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
'சாதாரணமாக சட்டம் மற்றும் நிபந்தனைகளை வெளியிடும் போது நாடொன்று தரப்படுத்தலில் உயர்வதென்பது பிக அரிதான விடயமாகும். எனினும் இலங்கை பெற்றுக் கொண்ட இந்த வெற்றி தொடர்பில் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சருக்கும், தகவல் ஆணைக்குழுவிற்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகும்' என கனடா மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் டொபி மென்டல் தெரிவித்துள்ளார்.
இத்தரப்படுத்தலின் அடிப்படையில் முதல் இரு இடங்களையும் முறையே மெக்சிகோ மற்றும் சேர்பியா ஆகிய நாடுகள் பெற்றுக் கொண்டுள்ளன. இலங்கை பெற்றுக் கொண்ட இவ்வெற்றியுடன் தெற்காசியாவில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் முதல் இடத்தை பெற்றுள்ளது. உலக தரப்படுத்தலின் அடிப்படையில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடமே கிடைத்துள்ளது.
'இது இலங்கை பெற்றுக் கொண்ட விசேட வெற்றியாகும். அதேபோன்று பொதுமக்களுக்கு தகவல் அறிந்து கொள்ளும் உரிமையினை பெற்றுக் கொடுக்கும் செயன்முறையினை ஆரம்பித்ததைத் தொடர்ந்து நாம் உலகத்தில் மூன்றாவது இடத்துக்கு தரப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும். நல்லாட்சியினை பலப்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போது அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சர்வதேச பிரதிபலிப்புகளின் மூலம் மேலும் பலமடைகின்றோம்' என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தகவல் அறியும் சட்டம் இம்மாதம் மூன்றாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 800க்கும் அதிகமான தகவல்களை அறிந்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் அரச நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதுடன், சட்டம் செயற்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 300இனை கடந்துள்ளது.

0 Responses to சர்வதேச தரப்படுத்தலில் இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு மூன்றாவது இடம்!