Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் தற்பொழுது பேசப்பட்டுவருகின்றன. ஆனால், கடந்த ஆட்சியின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பிரயோகித்து மாகாண சபைகள் பலவீனப்படுத்தப்பட்டன.

அரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில் எதிரணியிலிருந்து உறுப்பினர்கள் வளைத்துப்போடப்பட்டனர். அவர்களைப் பயன்படுத்தியே மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

13வது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கவும், கிராம அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திவிநெகும சட்டத்தின் ஊடாக அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.” என்றுள்ளார்.

0 Responses to பறிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com