Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் மக்கள் சேவையை நிறைவேற்றுவதற்காகவும் அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கூறியுள்ளதாவது, “மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் கட்சி, இனம், சமயம் என்ற வேறுபாடுகள் கிடையாது. நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களும் சமாதானமாக வாழ்வதற்கான உரிமையையும் தேவையான வசதி வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com