Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைதிப் படையினர் எனும் போர்வையில் தமிழர் தாயகப் பகுதியான வடக்கு- கிழக்கிற்கு வருகை தந்த இந்தியப் படையினர் மேற்கொண்ட அத்துமீறல்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 19) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நினைவு நிகழ்வு, கல்லடியிலுள்ள அன்னை பூபதியின் கல்லறையில் அஞ்சலி செலுத்துவதோடு ஆரம்பித்து நடைபெற்றது.

இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி, 31 நாட்கள் போராடி ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர்நீத்தார்.

0 Responses to இந்தியப் படையினரின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடிய அன்னை பூபதியின் 29வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com