Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை ஒன்று கூடிய ஐ.நா பொதுக்கூட்டத்தில் வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை அது அலட்சியமாகத் தொடரும் பட்சத்தில் அதன் மீது புதிய பொருளாதாரத் தடைகள் நிச்சயம் விதிக்கப் படும் என்ற முடிவு எடுக்கப் பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியதுடன் இதில் இறுதிச் சோதனை தோல்வியில் முடிவடைந்ததாக அமெரிக்கா செய்மதிப் புகைப்படங்கள் மூலம் கண்காணித்து அறிவித்திருந்தது.

இச்சோதனைகளை அடுத்து அதிபர் டிரம்ப் அதிரடியாக அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் அடங்கலாக ஆயிரக் கணக்கான கடற்படை வீரர்களை கொரிய  தீபகற்பத்தின் கடற் பகுதியில் குவிக்கப் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் தான் இன்றைய ஐ.நா ஒன்று கூடலில் பிராந்திய நலனை முன்னிட்டு ஏவுகணை சோதனைகளையோ அல்லது அணுவாயுத சோதனைகளையோ வடகொரியா தவிர்க்க வேண்டும் என்றும் தனது செயற்பாடுகளால் அண்டை நாடுகளை அது தொடர்ந்து அச்சுறுத்தினால் நிச்சயம் புதிய பொருளாதாரத் தடைகளை அது அனுபவிக்க நேரிடும் என்றும் ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இதேவேளை வடகொரிய எல்லையில் தனது படைகளைக் குவிப்பதாக வெளியான தகவலை வதந்தி என்று மறுத்துள்ள ரஷ்யா அது அந்நாட்டுப் படைகளின் நகர்வு என்றும் விளக்கம் அளித்துள்ளது.

0 Responses to ஏவுகணை சோதனைகள் தொடர்ந்தால் வடகொரியாவுக்குப் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படும்!: ஐ.நா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com