பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்தின், ஆசிய- பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது அரசாங்க உயர் மட்டத்தினரை சந்திக்க உள்ள அவர், லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ‘பிந்திய உலகின் சவால்கள்’ என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்துப் பேசவுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவர் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

0 Responses to பிரித்தானியாவின் ஆசிய- பசுபிக் பிராந்திய அமைச்சர் இலங்கை வருகிறார்; த.தே.கூ.வையும் சந்திப்பார்!