இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் தொடர்பிலான விடயங்களில் தான் வாக்குறுதியளித்தபடி செயற்படவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடமே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், படைத்துறையினருக்கும் கடந்த வருடமே நான் ஆணையிட்டிருந்தேன். ஆனாலும், அவர்கள் அதனை செய்து முடிக்கவில்லை. இதனால், நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று சனிக்கிழமை மாலை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர். இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமைச்சர்கள், படைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புடன் நாளை திங்கட்கிழமை காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்தை நடத்தவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணி விடுவிப்பு, காணாமல் போனோர் தொடர்பில் வாக்குறுதி அளித்தபடி செயற்படவில்லை; இரா.சம்பந்தனிடம் மைத்திரி ஒப்புதல்!