கடந்த 17 நாட்களாக காணிக்காகப் போராடி வரும் தம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காணிக்கான போராட்டத்தை தாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும், ஆனாலும், தங்களின் போராட்டம் அரசியல் மற்றும் அதிகாரிகள் தரப்பால் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் ஊடகவியலாளர்கள் மாத்திரம் நாளாந்தம் வருகை தந்து தங்களின் பிரச்சினைகளையும் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்றும் பன்னங்கண்டி பசுபதிகமம் மக்களின் பிரச்சினையும் ஊடகவியலாளர்களின் முயற்சியனாலேயே தீர்க்கப்பட்டது. அதேபோல் எங்களின் பிரச்சினைகளையும் கரிசனையோடு வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்றும் பன்னங்கண்டி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை. எனவே இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரியே தாம் 17வது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் தங்களது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to காணிக்காகப் போராடும் எம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை; கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் கவலை!