மட்டக்களப்பு, கிரான் எனும் கிராமத்தில் பிறந்த பூபதித்தாய் ஒரு சமூக சேவகியாக தன்னை அர்பணித்து வாழ்ந்தவள். இலங்கை இந்திய இராணுவங்களின் பல ஆக்கிரமிப்புக் கோரங்களை வாழ்நாளில் கண்டு அனுபவித்த தமிழ்த் தாய். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உரிமையானது, அவசியமானது என்று ஏற்றுக்கொண்டாள்.
அகிம்சைக்கு ஆசான் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இந்தியப் போலி முகத்தை வெளிக்காட்டிய வெளிச்சம் இந்தப் புனித்தாய்.
இந்திய இராணுவம் தமிழீழத் தாயகத்தை சுட்டொித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கொடுமையை நிறுத்து என்று கொதித்தாள் பூபதித் தாய். பயங்கரவாத் தடைச் சட்டம் நிறுத்தப்பட வேண்டும். புலிகளோடு இந்திய இராணுவம் செய்துகொண்டிருக்கும் யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்ற இரண்டு அம்பசக் கோரிக்கையை வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தினாள்.
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் 19.03.1988 அன்று சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து அகிம்சைத் தீ மூட்டிய இந்தத் தமிழ் உணர்வு 31 நாட்கள் போராடி, 19.04.1988 அன்று உரிமையே உயிரிலும் மேலானது என்று நிறுவித்து வீரச்சாவந்தாள் பூபதித்தாய்.
பூபதித் தாயின் உயிரிழந்த ஏப்பிரல் 19 தமிழீழ நாட்டுப் பற்றாளர் நாளாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. அகிம்சை வடிவத்தில் தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய பூபதித் தாய் போன்று தமிழர் தாயத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் நாட்டுப்பற்றாளர்கள் உணர்வுகளைப் பல வடிவங்களில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டுப்பற்றாளர்களின் தியாகங்கள் விடியப் போகும் நாளை தமிழீழத் தேசியத்திற்கு பெரும்பாண்மையாக நின்று தோள் கொடுக்கும் என்பதையே இன்றைய பூபதி நாள் சுட்டிக்காட்டுகின்றது.

0 Responses to அகிம்சையின் ஆயுதம் - அன்னை பூபதி