பாதுகாப்பு தரப்பினருடனான சந்திப்புக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமித்துள்ள காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு இராணுவம் இணங்கியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சந்திப்புக்களில் முன்னேற்றம்; படிப்படியாக காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்: சுமந்திரன்