Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யின் நம்பிக்கைக்குரியவரிடம் விசாரணை செய்ய கேரளா விரைந்துள்ளனர் காவல்துறை தனிப்படையினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கொடநாடு பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டம் மற்றும் பங்களா உள்ளது.இந்த எஸ்டேட்டுக்குள் நுழைய வேண்டும் என்றால் 10 நுழைவு வாயில்கள் உள்ளன.ஒவ்வொரு நுழைவு வாயிலுக்கும் பாதுகாவலர்கள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 26ம் திகதி முக்கிய நுழைவு வாயிலில் காவல் காத்துக்கொண்டு இருந்த காவலாளி ஒருவரை கொள்ளைக்காரர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டு, கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இதில், மற்றொரு காவலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சைப் பெற்று வருகிறார்.இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜெயலலிதாவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய காவலாளியான கேரளாவை சேர்ந்தவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்கிற சதேகத்தின்பேரில், அந்த நபரை விசாரிக்க தனிப்படை பிரிவு போலீசார் கேரளாவிரைந்துள்ளனர்.

0 Responses to கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யின் நம்பிக்கைக்குரியவரிடம் விசாரணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com