Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இங்கு பெற்றோலிய தொழிற் சங்கங்களின் போராட்டம் குறித்து ஆராயப்பட்டது. இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “நடக்காத ஒன்றைப்பற்றி கற்பனையாக சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் மாற்றம் இல்லை. அரச வளங்களை விற்பதற்கு சுதந்திரக் கட்சி எதிரானது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சி ஊடக மாநாட்டில் பேசிய லக்ஷ்மன் யப்பா அபேவர்த்தன, “இந்திய கம்பனிக்கு எண்ணெய் குதங்களை வழங்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது பற்றி அமைச்சரவையில் எதுவும் ஆராயப்படவில்லை.

2001இல் ஒப்பந்தமொன்றினூடாக இந்திய கம்பனிக்கு பங்குகள் வழங்கி நிர்வாகிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் அரசுக்கு மூன்றில் இரண்டு பங்குகள் உள்ளன. இந்த நிலையிலே இவற்றை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தயாராவதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர். இதில் எந்த உண்மையும் கிடையாது.” என்றுள்ளார்.

0 Responses to திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com