Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களையும், அவர்களது ஆதங்கங்கள் மற்றும் கோரிக்கைகளையும் புறக்கணிப்பது எவருக்கும் நல்லதல்ல என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்று வியாழக்கிழமை பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக வடக்கு மாகாண சபையின் 91வது அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஏதேனும் நற்செய்தி அரசாங்கத் தரப்பில் இருந்து வராதா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில், 50 நாட்களுக்கும் மேலான போராட்டங்கள் உத்தியோகபூர்வமாக எவ்வித எதிர்வினையும் கொண்டு வராத நிலையில்தான், நீதிக்கான ஒரு காத்திரமான ஜனநாயக செயற்பாடு என்ற முறையில் இன்றைய மக்கள் அணி திரள்வு, இன்றைய கடையடைப்புப் போராட்டமாக நடைபெறுகின்றது.

இந்நிலையில் முஸ்லிம் சகோதரர்கள், சிங்கள சகோதரர்கள் அடங்கலான வடக்கு கிழக்கு மக்கள் தமது மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒருங்கிணைந்து போராடுவது கட்டாயமாகியுள்ள காலகட்டத்தில், தான் உட்பட அனைவரும் இம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம், எம் மக்களையும் அவர்களின் ஆதங்கங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது யாருக்குமே நல்லதல்ல என்பதனையும் தெற்கில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களது கோரிக்கைகள் நியாயமானவை, அவை மக்களது அடிப்படை உரிமைகள் சார்ந்தவை. ஆகவே அவற்றிற்கு தீர்வு காணுதல் அவசியம். தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பின்நிற்பதே இன்றைய வடக்கு கிழக்கு ரீதியான போராட்டத்தின் அடிப்படைக் காரணமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும் நல்லதல்ல: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com