Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது. இரண்டு பிரதான கட்சிகளும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வலியுறுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக்கூடாது. சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயற்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என வினவியபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் தேசிய பிரச்சினைகளை சரியான வகையில் கையாள வேண்டும். எனினும் பிரதான இரண்டு கட்சிகளும் தனித்தனியாக ஆட்சியை நடத்திய போதிலும் அதேபோல் இப்பொது இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டு ஆட்சியை முன்னெடுத்து வரும் நிலையிலும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்று இன்னும் எட்டப்படவில்லை.

அவ்வாறு இருக்கையில் இப்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு நாட்டின் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கக் கூடிய வகையில் அமையப்பெற வேண்டும். மாறாக பிரச்சினைகளை பெரிதாக்கி மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது. ” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com