தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வடக்கு- கிழக்கு இணைப்பு இன்றியமையாதது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை இன்று சனிக்கிழமை மேற்கொண்டு வந்திருந்த இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் துருக்கி தூதுவர் வினவியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆரம்பத்தில் வடக்கு- கிழக்கில் 10 வீதமான பெரும்பான்மை இனத்தவர்களே காணப்பட்டனர். ஆனால் தற்போது இங்கு 31 வீதமான பெரும்பான்மை மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
ஆண்டாண்டு காலமாக தமிழ் பேசும் மக்களின் இடமாக விளங்கிய வடக்கு- கிழக்கில் தற்போது சிங்கள மேலாதிக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கையும் கிழக்கையும் பிரித்து மக்களிடையே குழப்பத்தினையும் கலவரத்தினையும் ஏற்படுத்தி, இங்கிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி முற்று முழுதாக பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது. எனவே எமது பாதுகாப்பின் நிமித்தம் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்: விக்னேஸ்வரன்